Monday, February 2, 2009

அடி சகியே!

இன்றென் கனவில் வந்திருந்தாய் நண்பனே.
உன் கவித்தமிழின் திமிர் இன்னும் அடர்த்தியாக,
சிரித்தபடி கதை பேசினாய்.

தூரத்தில் ஷெல் கூவி வரும் ஒலிகேட்டு
குப்புற வீழ்ந்து நிலத்தோடு ஒட்டினேன்
நீயும் அருகிருந்தாய்.

உன் இதழ்க்கடையில் முறுவல்,
ஒரு திருப்தி இழையோடிக் கொண்டது.
கனவுக்குள் கிடந்தபடி காரணத்தைக் கேட்டேன்.

“அடி சகியே!
எப்போதும் நீ எங்கள் அருகிருக்கிறாய்”
என்றுரைத்து என் கனவைக் கலைத்துவிட்டாய்.